ads

ஜீவாவின் கீ படம் ரிலீஸ் தேதி மாற்றம்

jiiva kee release date change

jiiva kee release date change

இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய  கலீஸ் என்பவர் இயக்கிவரும் படம் 'கீ'. இந்த படத்தில் நாயகனாக ஜீவா நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கிகல்ரானி இணைந்துள்ளார். மேலும் இப்படத்தினை 'குலோபல் இன்போடெய்ன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம்  சார்பில் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் தயாரித்து வருகிறார். இவர் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடோடிகள் படத்தின் மூலம் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் தென்மேற்கு பருவக்காற்று, ஆடு புலி, பட்டது யானை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, ஈட்டி, மிருதன் போன்ற வெற்றி படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரிப்பில் இறுதியாக 'AAA' படம் வெளிவந்தது.     

'காவியத் தலைவன்’ புகழ் அனைகா சொட்டி, ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா போன்றவர்கள் முக்கிய வேடத்தில் இணைந்துள்ள இப்படத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் பணியிலும், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவிலும் நாகூரான் படத்தொகுப்பு பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த நாட்களில் வெளிவந்த படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியிருந்தது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் முன்னதாகவே முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வரும் படக்குழு வருகிற பிப்ரவரி 9ம் தேதி படத்தினை வெளியிடுவதாக தெரிவித்திருந்தது. அதே நாளில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'கலகலப்பு 2' வெளிவர உள்ளது. இந்த படத்தில் ஜீவா மற்றும் நிக்கிகல்ரானி நடித்திருப்பதால் ஒரே நாளில் இவர்களது படம் வெளிவர வேண்டாம் என்று 'கீ' படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு மாற்றியமைத்துள்ளது. மேலும் விரைவில் புதிய வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.      

ஜீவாவின் கீ படம் ரிலீஸ் தேதி மாற்றம்