கமல் விக்ரம் நடிப்பில் உருவாகும் புது பட தகவல்

kamal vikram new movie

கடந்த 2015ம் ஆண்டில் கமல்ஹாசன், த்ரிஷா இணைந்து அதிரடி த்ரில்லராக உருவான படம் 'தூங்கா வனம்'. இந்த படத்தினை ராஜேஷ் எம் செல்வா இயக்கியிருந்தார். இதில் பிரகாஷ் ராஜ், கிஷோர், சம்பத் ராஜ், யோகி சேது, மது ஷாலினி, ஆஷா சரத் உட்பட பலர் நடித்திருந்தனர். அதிரடி த்ரில்லர் காட்சியில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.        



இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து ராஜேஷ் செல்வா, சீயான் விக்ரம் நடிப்பில் ஒரு புது படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. தற்பொழுது சீயான் விக்ரம் கெளதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்', விஜய் சந்தர் இயக்கத்தில் 'ஸ்கெட்ச்', ஹரி இயக்கத்தில் 'சாமி ஸ்கொயர்' போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைவதற்குள்ளே விக்ரமின் புதிய படத்தின் தகவல் வெளிவந்துள்ளது.      



விக்ரமின் இந்த புதிய படத்தினை உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான 'ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் பேனர்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கமல் இப்படத்தினை தயாரிப்பதாக தகவலில் வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்திலும் கமல் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. இந்த படத்தின் பற்றிய தகவல் படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பாக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கமல் விக்ரம் நடிப்பில் உருவாகும் புது பட தகவல்