ads

என் தம்பி இங்கிலீஸ் படத்துல நடுச்சிட்டான் - பிரபல இயக்குனர்

jeyam-ravi-brother

jeyam-ravi-brother

வனமகன் படத்தினை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்து வரும் டிக் டிக் டிக் படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இந்த படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள், திரையுலக வட்டங்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்தியாவை தாக்க வரும் ஒரு விண்கல்லை தடுக்கும் முயற்சியில் ஜெயம் ரவி மற்றும் விண்வெளி ஆராய்ச்சி டீம் மேற்கொள்ளும் ஆபத்தான மிஷன் தான் டிக் டிக் டிக். மேலும் இந்த படம் இந்தியாவின் முதன் முதலாக விண்வெளி சார்ந்த படமாக இருப்பது குறிபிட தக்கது.

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் இப்படத்தில் ஆரோன் அஜிஸ், நிவேதா பெத்துராஜ், ஜெய பிரகாஷ், ரமேஷ் திலக் என பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் ஜெயம் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா, என் தம்பி இங்கிலீஸ் படத்துல நடிச்சிட்டான்.......உங்க டீம் சூப்பர்....ஆச்சர்யப்பட வைக்கிறது. தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியதற்கு எனது பாராட்டுக்கள்." என்று அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் .

    

என் தம்பி இங்கிலீஸ் படத்துல நடுச்சிட்டான் - பிரபல இயக்குனர்