தெலுங்கு பிரபலத்துடன் இணையும் இசைஞானி இளையராஜா

By : Rathiga       Published On : Feb 12, 2018 17:49 IST    
ilayaraja music for chiranjeevi movie ilayaraja music for chiranjeevi movie

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவி கடந்த ஆண்டு வெளிவந்த 'கைதி நம்பர் 150' படத்தின் வெற்றியை தொடந்து தனது 151வது படத்தினை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு 'சயிரா நரசிம்ம ரெட்டி' என்று தலைப்பினை வைத்துள்ளனர். ‘KONIDELA புரொடக்ஷன் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சிரஞ்சீவியின் மகனான 'மெகா பவர் ஸ்டார்' ராம் சரண் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். வரலாற்று சார்ந்த இப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, சுதீப், நயன்தாரா போன்ற பல பிரபல நடிகர்கள் இணைந்துள்ளனர்.  இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, சயிரா நரசிம்ம ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் சிரஞ்சீவிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நம்பிக்கைக்குரிய கதாபாத்திரத்தை கையாண்டு வருகிறார். மேலும் இப்படத்தில் சேதுபதி 'ஒப்பாயா' என்ற கேரக்டரில் நடித்து வருவதாக கடந்த நாட்களில் படக்குழு தகவலை வெளியிட்டிருந்தது. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தில் இசையமைக்கும் பணியில் ஏஆர். ரகுமான் இணைத்திருப்பதாக படக்குழு முன்னதாகவே தகவலை வெளியிட்டிருந்தது. தற்பொழுது வந்த தகவலில் சில காரணத்தினால் ஏஆர். ரகுமான் இப்படத்தில் இருந்து விலகியதாகவும் அவருக்கு பதில் இசைஞானி இளையராஜாவை இணைத்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த தகவலில் அதிகார பூர்வ அறிவிப்பு படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.    


தெலுங்கு பிரபலத்துடன் இணையும் இசைஞானி இளையராஜா


  Tags :