ads

நாச்சியார் படத்திற்கு வந்த சோதனை !

naatchiar movie teaser issue

naatchiar movie teaser issue

இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் நாச்சியார் படத்தின் டீசர் நேற்று மாலை வெளிவந்தது. மற்ற படங்களின் டீசர் என்றால் சில வார்த்தைகளை வெளியிட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை எதிர்பார்க்கும் இந்நிலையில் நாச்சியார் படத்தின் டீசர் முழுக்க இசையின் அடிப்படையில் வெளியிட்டதோடு முடிவில் ஜோதிகா உச்சரித்த ஒற்றை வார்த்தை சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது சமூக வலைத்தளங்களின் விமர்சனங்கள், இப்ப வருகிற படங்களில் இது போன்று வார்த்தைகளை வைத்தால் தான் வெற்றி படமாக அமையும்.  அதனால் ஜோதிகா பேசியதில் தவறு ஒன்றும் இல்லை என்றும், பெண்களின் முன்னேற்றத்திற்கான படங்களில் நடிப்பதாக ஜோதிகா முன்பு சொன்னது வெறும் வார்த்தைதானா என்றும், இந்த படத்தை குழந்தைகள் பார்த்தால் அந்த வார்த்தையின் அர்த்தத்தை கேட்பார்களே..... அப்ப இது குடுப்பத்துடன் பார்க்க முடியாதா என பல கேள்விகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.  

இதன் காரணத்தினால் ஜோதிகாவின் ரசிகர்கள் இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியதை தவிர்த்திருக்கலாம் என வருத்தத்தில் உள்ளனர் .இந்நிலையில் படத்திற்கு இது போன்று சோதனைகள் வந்ததால் வரவேற்புகள் இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும் என எதிர்பார்க்க முடியவில்லை.  

நாச்சியார் படத்திற்கு வந்த சோதனை !