உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நிமிர் படத்தின் ட்ரைலர்

nimir movie trailer on january 8th

இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் படம் 'நிமிர்'. இந்த படம் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளிவந்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்ற மலையாள படத்தின் ரீமேக் என்பது குறிப்பிட்ட தக்கது. முன்சாண்ட் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா தயாரிக்கும் இப்படத்தில் நமீதா, பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இதற்கு அடுத்த படியாக அஜனீஷ் லோக்நாத், தர்புக சிவா ஆகியோர் இணைத்து இசையமைத்துள்ள 'நெஞ்சில் மாமழை' என்ற சிங்கிள் பாடலை இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  வெளியிட்டார். இவை ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்று வந்ததினை தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வருகிற 8ம் தேதி மாலை 6மணிக்கு வெளியிடுவதாக உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்திற்கான தொலைக்காட்சி உரிமையையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் டிவி வாங்கியிருப்பது குறிப்பிட்ட தக்கது. 


உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நிமிர் படத்தின் ட்ரைலர்


  Tags : 
 • nimir trailer coming on Jan 8th at 6pm
 • nimir movie trailer released on january 8th at 6pm
 • nimir movie trailer released on january 8th
 • nimir movie trailer release
 • nimir
 • nimir trailer launch
 • udhayanidhi stalins nimir movie trailer release
 • udhayanidhi stalins nimir official
 • நிமிர் ட்ரைலர் ரிலீஸ்
 • உதயநிதி படத்தின் ட்ரைலர் ரிலீஸ்
 • உதயநிதி ஸ்டாலினின் நிமிர் ட்ரைலர்
 • நிமிர் ட்ரைலர்
 • ஜனவரி 8ல் வெளியாகும் நிமிர் ட்ரைலர்.
 • உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நிமிர் படத்தின் ட்ரைலர் வெளியீடு