ads

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

oru nalla naal paathu solren movie release at february 2

oru nalla naal paathu solren movie release at february 2

புதுமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பல வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கியுள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக், நிஹாரிகா கோனிடேலா, காயத்ரி சங்கர், ரமேஷ் திலக் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் டீசரில் வெளிவந்த விஜய் சேதுபதியின் பல வித கெட்டப்புகள் ரசிகர்களிடம் வெகுவான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.  7சி என்டர்டைன்மெண்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 

இவர் இசையில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த சிங்கிள் ட்ராக் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.  சமீபத்தில் இந்த படத்தின் இசையை ஜனவரி 6-இல் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் படக்குழு வெளியிட்டது. இந்த படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதில் இந்த படத்தை உலகமெங்கும் பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தணிக்க வாரியம் இந்த படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

oru nalla naal paathu solren movie release at february 2oru nalla naal paathu solren movie release at february 2

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு