ads

காஞ்சனா 3-இல் ஓவியா

காஞ்சனா 3-இல் ஓவியா

காஞ்சனா 3-இல் ஓவியா

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஓவியாவிற்கு தற்போது ஏராளமான படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் இவர் முன்னணி கதாநாயகியாக முன்னேறி கொண்டிருக்கிறார். தற்போது ஏராளமான கடைகளுக்கு விளம்பர நாயகியாக வலம் வருகிறார். இவருக்கென்று ஓவியா ஆர்மி என்று தனியொரு கூட்டத்தையே சேர்த்துள்ளனர் ரசிக பெருமக்கள்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய முனி, காஞ்சனா மற்றும் காஞ்சனா 2 இதன் வரிசையை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா-3 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்திற்கு இரண்டு கதாநாயகிகளை படக்குழு தேர்வு செய்துள்ளது.

 'முனி' படத்தில் நடித்த வேதிகா ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பின் கீழ் கலாநிதி மாறன் தயாரித்து வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் பிக் பாஸ் புகழ் ஓவியா இரண்டாவது கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்பட பிடிப்பின் போது எடுத்த ஓவியா புகைப்படம் வைரலாக பரவிவருகிறது. 

காஞ்சனா 3-இல் ஓவியா