தஞ்சாவூரில் துவங்கிய ஓவியாவின் புது பட ஷூட்டிங்

oviya vemal k2 shoot begins

இயக்குனர் ஏ சற்குணம் எழுத்து மற்றும் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த 'களவாணி' படத்தில் விமல் நாயகனாகவும் 'பிக் பாஸ்' புகழ் ஓவியா நாயகியாகவும் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனர் ஏ சற்குணம் இயக்குனராகவும் நடிகை ஓவியா நாயகியாகவும் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சூரி போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற கஞ்சா கருப்பின் காமெடிகள்  பெரிதும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளனர். 



இந்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் ஏ சற்குணம் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகவுள்ளார். மேலும் இப்படத்திலும் விமல், ஓவியா கூட்டணி இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் தலைப்பு 'k2' என்ற டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டார். இந்த டைட்டில் லுக் போஸ்டரின் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும் இயக்குனர் சற்குணம் படத்தினை இயக்குவதோடு அவருக்கு சொந்தமான ‘வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அவரே படத்தினையும் தயாரிக்கவுள்ளார்.     



விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ப்ரீ-ப்ரொடெக்சன் பணிகள் முடிவடைந்து தற்பொழுது படத்தின் ஷூட்டிங்கை நேற்று (6.2.2018) தஞ்சாவூர் பகுதியில் முதல் முறையாக துவங்கியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இப்படப்பிடிப்பு தொடர்ந்து 55 நாட்கள் நடைபெறுவதாகவும் இந்த ஒரே ஷெடியூலில் படத்தின் அனைத்து காட்சிகளையும் படமாகவிருப்பதாகவும் தகவலில் வெளிவந்துள்ளது.   

k2 shooting still

தஞ்சாவூரில் துவங்கிய ஓவியாவின் புது பட ஷூட்டிங்


  Tags :