ads

பிரபு தேவாவின் 'குலேபகாவலி' பாடல்கள்

gulebhagavali songs

gulebhagavali songs

இயக்குனர் எஸ் கல்யாண் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'குலேபகாவலி'. இந்த படத்தில் நடிகர் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இந்த படத்திற்கு காஞ்சிபுரம் சுதர்சன் இசையமைத்துள்ளார். ஆர்எஸ் ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, சந்தியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. மேலும் இதனை தொடர்ந்து நடிகர் பிரபு தேவா தமிழில் யங் மங் ஜங், மெர்குரி, லட்சுமி மற்றும் ஹிந்தியில் காமோஷி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத சில படங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகிறது. 

பிரபு தேவாவின் 'குலேபகாவலி' பாடல்கள்