சர்வதேச பலூன் திருவிழாவில் ரஜினியின் 2.0

rajinikanth 2 point 0 balloon in pollachi

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்க்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.  கடந்த சில மாதத்திற்கு முன்பு துபாயில் படத்தின் இசையை பிரமாண்டமான முறையில்  லைக்கா ப்ரொடெக்சன் வெளியிட்டது. அதிகமான பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள  இப்படத்தில் 'இசை புயல்' ஏஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.      படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்துவதற்காக பிரிஸ்டோல்      ( கிளாஸ்டர்ஷயரில் உள்ள ஒரு நகரம் ) , அமெரிக்கா, துபாய் போன்ற இடங்களில் மிக பெரிய பலூனில் காற்றை அதிகளவு நிரப்பி படத்தின் பெயர், ரஜினி, அக்க்ஷய் குமார் புகைப்படங்களை அச்சடித்து வானில் பறக்கவிட்டனர். மேலும் துபாயில் ரசிகர்கள் மெய் சிலிர்க்கும் வகையில் பறக்கும் சாகச வீரர்களை கொண்டு படத்தின் போஸ்டரை வானில் பறக்கவிட்டனர். இதனை தொடந்து சர்வதேச பலூன் திருவிழாவை முன்னிட்டு இம்மாதம் 10 முதல் 16ம் தேதி வரை கோயம்பத்தூரில் உள்ள பொள்ளாச்சி நகரத்தில் நடைபெற்று வரும் பலூன் திருவிழாவில் 2.0 படத்தின் போஸ்டரின் பலூனையும் பறக்க விட்டுள்ளனர். இதில் இந்திய சுற்றுல்லா தேசியக்கொடி பலூன் மற்றும் ஜெர்மனி, அமெரிக்கா, நெதர்லாந்த் உள்ளிட்ட 12 நாடுகளின் பலூனையும் பறக்கவிட்டுள்ளனர். இதனை பார்ப்பதற்கு சுற்றுல்லா பயணிகள், ரசிகர்கள் என பலரும் கண்டுகளித்து வருகின்றனர்.             

rajinikanth 2 point 0 new balloon
rajinikanth 2 point 0 new balloon in pollachi