ads

சவரகத்தி படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு

savarakathi release from february 9th

savarakathi release from february 9th

அறிமுக இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் இயக்குநர்கள் ராம் – மிஷ்கின், நடிகை பூர்ணா நடிப்பில் உருவாக்கி வரும் படம் 'சரவகத்தி'. ஜி.ஆர்.ஆதித்யா இயக்குனர் மிஸ்கின் உடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து தற்பொழுது இந்த படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்துள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றை எழுதி தனக்கு சொந்தமான ‘LONE WOLF புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் மிஷ்கின் தயாரித்து வரும் இப்படத்தில் அரோல் கொரேலி இசையமைத்துள்ளார். இவருடன் இணைந்து கார்த்திக் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட   ஜூலியன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். 

படக்குழு கடந்த நாட்களில் வெளியிட்ட போஸ்டர்ஸ், இரண்டு டீசர், மேக்கிங் வீடியோ மற்றும் தங்கக்கத்தி எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தினை பார்த்த சென்சார் குழு அதிகாரிகள் படத்திற்கு கிரீன் யு சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை ‘KRIKES சினி கிரியேஷன்ஸ்' நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளிவந்தது. இந்நிலையில் படத்தினை வருகிற பிப்ரவரி 9ல் வெளியிடுவதாக அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டதோடு படத்தின் ஒரு புதிய ப்ரோமோ வீடியோவை படக்குழு சில மணி நேரத்திற்கு முன்பு வெளியிட்டுள்ளது.        

சவரகத்தி படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு