சவரக்கத்தி படத்தின் புதிய ட்ரைலர் வெளியீடு

By : Rathiga       Published On : Feb 07, 2018 16:25 IST    
savarakathi new official trailer release savarakathi new official trailer release

கடந்த ஆண்டு இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த 'துப்பறிவாளன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. படத்தின் தலைப்பினை போன்று துப்பறிதலை (உளவு ) மையமாக கொண்டு உருவான இப்படத்தினை 'டிடக்டிவ்' என்ற தலைப்பில் தெலுங்கு திரையுலகிலும் வெளியிட்டனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் சவரகத்தி என்ற புது படத்தில் லோக்கல் ரவுடியாக நடித்து வருவதோடு, இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றை எழுதி தனக்கு சொந்தமான ‘LONE WOLF புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அவரே படத்தினையும் தயாரித்து வருகிறார்.இயக்குனர் ராம், நடிகை பூர்ணா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கிவருகிறார். இவர் இயக்குனர் மிஸ்கின் உடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து தற்பொழுது இந்த படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் இருந்து கடந்த நாட்களில் வெளியான போஸ்டர், டீசர், மேக்கிங் வீடியோ, தங்கக்கத்தி எனும் பாடல் மற்றும் ட்ரைலர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது. லோக்கல் ரவுடி கெட்டப்பை கையாண்டுள்ள இயக்குனர் மிஷ்கினின் காட்சிகள் மற்றும் சில அதிரடி வசனங்கள் ரசிகர்களிடம் வெகுவான வரவேப்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.      வருகிற பிப்ரவரி 9ம் தேதியில் வெளிவர உள்ள இப்படத்தில் தற்பொழுது புதுவித ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் மிஷ்கினின் அதிரடி சண்டை காட்சிகள் அதிகளவு இடம் பெற்றுள்ளது. மேலும் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றார் போன்று இயக்குனர் ராம் படத்தின் முடிவில் (க்ளைமாக்ஸ் ) சவரகத்தியின் மூலம் ஒரு புதுவிதமாக வியக்கவைக்கும் சாகசத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது 


சவரக்கத்தி படத்தின் புதிய ட்ரைலர் வெளியீடு


  Tags :