ads

அஜித் இயக்குனருடன் இணையும் லிட்டில் சூப்பர் ஸ்டார்

simbu new film updates

simbu new film updates

பாண்டிராஜ் இயக்கத்தில் சிலம்பரசன், நயன்தாரா இணைந்து நடித்து 2016ல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற 'இது நம்ம ஆளு' படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் கதை,  இசை அனைத்தும் ரசிகர்களிடம் வெகுவாக கவரப்பட்டது. இந்த தொடர் வெற்றிக்கு அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்  'AAA'நடித்திருந்தார்.   

இதனை தொடந்து தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கவிருக்கும் மல்ட்டி ஸ்டார் படத்தில் சிலம்பரசன் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலம் முதல் முறையாக இவர்களின் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தில் 'தனி ஒருவன்' அரவிந்த் சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். இதில் காவல் துறை அதிகாரியாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வளம் வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனை அடுத்து சிலம்பரசன் ஒரு புது படத்தை இயக்கி நடிக்க உள்ளார் . தற்பொழுது அந்த புதுப்படத்தில் பிரீ-ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிம்பு மற்றொரு புது படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தினை இயக்குனர் சரண் இயக்கவுள்ளார். இவர் தல அஜித் நடிப்பில் வெளிவந்த 'காதல் மன்னன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னரும் அஜித்தின் 'அமர்க்களம்' படத்தினை இயக்கினார். அதனை தொடர்ந்து ஜெமினி, ஜேஜே, வசூல் ராஜா MBBS,அட்டகாசம் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.  

அஜித் இயக்குனருடன் இணையும் லிட்டில் சூப்பர் ஸ்டார்