ads

இயக்குனர் செல்வராகவனின் சூர்யா 36 படப்பிடிப்பு துவக்கம்

suriya 36 movie shooting started yesterday

suriya 36 movie shooting started yesterday

நடிகர் சூர்யா நடிப்பில் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இதனை அடுத்து சூர்யா இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து தனது 36 வது படத்தை நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பை நேற்று படக்குழு துவங்கியுள்ளது. சூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவன் கூட்டணி முதன் முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளது. இயக்குனர் செல்வராகவன், தனது தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தம்பியான நடிகர் தனுஷின் அறிமுக படமான 'துள்ளுவதோ இளமை' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

இதனை அடுத்து  தனுஷின் 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுக்கோட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் கார்த்தியின் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் சிறந்த த்ரில்லர் படத்திற்கான எடிசன் விருதை பெற்றது. மேலும் இவருடைய காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள் சிறந்த இயக்குனருக்கான பிலிம் பேர் விருது மற்றும் சீமா விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சூர்யாவின் 36 வது படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார்.

இந்த படத்தை ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, எஸ்ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்க உள்ளனர். இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தீபாவளியில் வெளியாகவுள்ளது. சூர்யா 36 படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யாவுடன் 'நெஞ்சம் மறப்பதில்லை' மற்றும் சந்தானத்தின் 'மன்னவன் வந்தானடி' போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. மேலும் நடிகர் விஜய் தனது 62 வது படப்பிடிப்பை துவங்கியுள்ளார். இவரை தொடர்ந்து சூர்யா தனது 36 வது படப்பிடிப்பை துவங்கியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு தீபாவளியில் நடிகர் அஜித், விஜய், சூர்யா ஆகிய மூவரும் தனது ரசிகர்களுக்கு ஒரே நேரத்தில் விருந்தளிக்க உள்ளனர்.

இயக்குனர் செல்வராகவனின் சூர்யா 36 படப்பிடிப்பு துவக்கம்