ஏப்ரலில் துவங்கும் சூர்யாவின் புது படம்

suriya 37 movie shooting

'நானும் ரௌடி தான்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த போஸ்டர், டீசர், இசை போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து சூர்யாவின் 36வது படத்தினை இயக்குனர் செல்வா ராகவன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான தகவல் சில நாட்களுக்கு முன்பே வெளியிடப்பட்டு படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த நாட்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் இந்த படத்தில் 'ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி மற்றும்  ரகுல் ப்ரீத் சிங் என இரு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளார்.இதற்கு அடுத்தபடியாக சூர்யா தனது 37வது படத்தினை கேவி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக 'காங்' ப்ரோமோஷன் பேட்டியில் அவரே வெளியிட்டார். இதற்கு முன்னதாகவே 'அயன்', 'மாற்றான்' போன்ற படங்களை இயக்கிய கேவி.ஆனந்த் கூட்டணியில் மூன்றாவது முறையாக சூர்யா இணையவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் நாயகி, இதர நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள், கலை கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வரும் இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் மாதத்தில் துவங்கவிருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் சூர்யாவின் 36வது படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் செல்வா ராகவன் பொங்கல் தினத்தன்று துவக்கவிருப்பதாகவும் தகவலில் வந்துள்ளது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


ஏப்ரலில் துவங்கும் சூர்யாவின் புது படம்


  Tags : 
 • ஏப்ரலில் துவங்கும் சூர்யாவின் புது படம்
 • சூர்யாவின் 37வது படத்தின் படப்பிடிப்பு
 • ஏப்ரலில் துவங்கும் சூர்யாவின் 37வது படத்தின் படப்பிடிப்பு
 • சூர்யா 37வது படத்தின் படப்பிடிப்பு
 • சூர்யா 36வது படத்தின் படப்பிடிப்பு
 • கேவி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவின் 37வது படம்
 • செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் 36வது படம்
 • சூர்யா 37
 • சூர்யா 36
 • சூர்யாவின் புது படத்தின் படப்பிடிப்பு
 • suriya 37 film to start rolling from April
 • suriya 37 movie shooting start from april month
 • suriya 37 movie shooting start
 • kv anand directed suriya 37 film to start rolling from April
 • suriya 37 film to start
 • suriya new films shooting start
 • suriya 37
 • suriya 36