சூர்யா 38வது படத்தின் புது தகவல்

By : Rathiga       Published On : Feb 10, 2018 17:06 IST    
suriya 38 film updates suriya 38 film updates

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த 'தானா சேர்ந்த கூட்டம்' வெற்றியை தொடந்து சூர்யா தனது 36வது படத்தினை இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக சென்னை பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்பொழுது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை துவங்குவதற்கான பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரு நாயகிகள் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர். இந்த படத்தினை தொடந்து சூர்யா தனது 37வது படத்தினை கேவி.ஆனந்த் இயக்கத்தில் உருவாக்கவிருப்பதாக முன்னதாகவே தகவல் வெளிவந்தது. இந்த படத்தின் ப்ரீ -ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட்  மாதத்தில் துவங்குவதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சூர்யாவின் 38வது படத்திற்கான தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தினை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். இவர் தமிழில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'இறுதி சுற்று' படத்தினை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தினை சூர்யாவிற்கு சொந்தமான '2டி எண்டர்டைன்மெண்ட்' நிறுவனம் தயாரிப்பதாகவும், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் இசையமைக்கும் பணியில் இணைத்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. மேலும் இப்படத்தின் ப்ரீ -ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். மிக விரைவில் படத்தில் இணையவிருக்கும் இதர நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களின் பட்டியலை வெளியிடுவதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


சூர்யா 38வது படத்தின் புது தகவல்


  Tags :