விஜய் 62 அதிரடி சண்டை காட்சியின் புதிய தகவல்

By : Rathiga       Published On : Feb 07, 2018 14:12 IST    
vijay 62 current shooting updates vijay 62 current shooting updates

இளைய தளபதி விஜய் திரைப்பட துறையில் தனது 62வது படத்திற்கான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் அதிரடி சண்டை காட்சிகளுக்காக கொல்கத்தாவில் உயர்த்த கட்டிடத்தின் மீது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களாக  நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருணத்தை எட்டியுள்ளதாம். மேலும் வருகிற பிப்ரவரி 20ம் தேதியுடன் சண்டை காட்சியின் ஷூட்டிங் முடிவடைந்து விடுவதாக தகவல் வந்துள்ளது.        இந்த சண்டை காட்சிகளை வடிவமைப்பதற்காக தெலுங்கு திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம் மற்றும் லக்‌ஷ்மண் இணைந்துள்ளனர். இவர்கள் தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கத்தி, துப்பாக்கி படத்தினை தொடந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய் - ஏஆர்.முருகதாஸ் கூட்டணியில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். மேலும் இவர்களது கூட்டணியில் வெளிவந்த 'கத்தி' படத்தின் அதிரடி சண்டை காட்சிகளும் கொல்கத்தா பகுதியில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் பிரமாண்டமான முறையில் தயாரித்து வரும் இப்படத்தில் பல பிரபலங்கள் முதல் முறையாக இணைந்துள்ளனர். மேலும் சில பிரபலங்களை இணைப்பதற்கான தேர்வுகளும் நடைபெற்று வருவதாக தகவல் வந்துள்ளது. 


விஜய் 62 அதிரடி சண்டை காட்சியின் புதிய தகவல்


  Tags :