ads

தளபதி 62வின் டெஸ்ட் லுக் வைரல் வீடியோ

thalapathy 62 movie test look video

thalapathy 62 movie test look video

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. துப்பாக்கி, கத்தி படத்தினை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் விஜயின் 62 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. விஜயின் 62 வது படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் மலையாள ஒளிப்பதிவாளரான க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் மலையாளத்தில் நீலஹாசம் பச்சக்கடல் சுவன்ன பூமி, மரியம் முக்கு, காளி, சோலோ, ஹே ஜூடு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

மேலும் இந்த படத்தில் எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்கிறார். இவர் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் பல படங்களை எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு சிறந்த எடிட்டிங் பணிகளுக்கான விருதை பல படங்களுக்காக பெற்றுள்ளார்.இந்த படத்தின் இசையமைப்பாளராக இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படம் விவசாயம் சார்ந்த படம் என்று ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க  நடிகை ஓவியவிடம் பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் அவர் மறுத்ததனால் இவருக்கு பதிலாக பிக்பாஸ் ஜூலி நடிக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜயின் 62 வது படத்திற்கான ஃபோட்டோ ஷூட் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. விரைவில் படக்குழு இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

thalapathy 62 movie test look videothalapathy 62 movie test look video
thalapathy 62 movie test look videothalapathy 62 movie test look video
thalapathy 62 movie test look videothalapathy 62 movie test look video
vijay 62 latest photoshootvijay 62 latest photoshoot

தளபதி 62வின் டெஸ்ட் லுக் வைரல் வீடியோ