ads

திரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சிகளை எடுப்பதற்கு இத்தனை டேக்குகளா !

theeran athigaram ondru movie stills

theeran athigaram ondru movie stills

காவல் துறை அதிகாரியாக கார்த்தி நடித்துள்ள திரன் அதிகாரம் ஒன்று படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ளார். வினோத் இயக்கும் இப்படத்தினை வருகிற 17ம் தேதி வெளியிட உள்ளது.  இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் படத்தின் சில துளிகளை பற்றி கூறியுள்ளார்.

"திறன் அதிகாரம் ஒன்று படத்தின் படப்பிடிப்பிற்காக இடங்களை தேடி கண்டு பிடிப்பது ஒரு பெரிய வேலையாக இருந்தது. அந்த காட்சிகள் பாலைவனம் நிலப்பரப்பில் நடப்பது போன்று இருந்ததால் பல மாநிலங்களில் இடத்தினை தேடி அலைந்தோம். ராஜஸ்தான், ஜெய்ஷ் அஃபர் போன்ற இடங்களில் சுற்றி உள்ள பகுதிகளில் பல இடங்களை கண்டறிந்தோம். அதன் பிறகு ஒரு இடத்தினை தேர்வு செய்து படப்பிடிப்பு எடுக்கப்பட்டது. அந்த இடத்தில் அதிகளவு வெப்பம் இருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அனைவரும் சோர்ந்து போனோம். மேலும் காற்று வீசும் வேகம் அதிகளவு இருந்ததால் ஒரு காட்சியை எடுப்பதற்கு பத்து டேக்கிற்கு மேல் ஆனது. கார்த்தி மணலுக்குள்ளிருந்து வெளிவருவது போன்று பஸ்ட் லுக், டீசரில் வெளிவந்த காட்சியை எடுப்பதற்கு அதிகளவு நேரம் செலவிடப்பட்டது.

படத்தின் பாடல் காட்சிகள் பிற மாநிலத்தில் எடுக்க இருப்பதாக இருந்த நிலையில், இறுதியில் சென்னையில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் இவர்களுக்கு நல்ல காதல் வெளிப்பட்டிருக்கிறது.  மேலும் படத்தினை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.        

திரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சிகளை எடுப்பதற்கு இத்தனை டேக்குகளா !