ஜெயம்ரவியின் டிக் டிக் டிக் படத்தின் தெலுங்கு டீசர்

tik tik tik movie telugu official motion teaser

ஜெயம் ரவி தற்பொழுது நடித்துள்ள படம் 'டிக் டிக் டிக்'. இந்த படம் இந்தியாவில் முதல் விண்வெளியை சார்ந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் பல்வேறு திரைத்துறையினர்  பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் ஜெயம் ரவி மேஜிக் மேன் கதாபத்திரத்தில் களமிறங்கியுள்ளார். அவரின் மகன் ஆரவ் ஜெயம் ரவி இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் குடியரசு தின விருந்தாக ஜனவரி 26ம் தேதி வெளிவர உள்ள இப்படத்தில் நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், அருண், மன்சூர் அலி கான் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் போஸ்டர், ட்ரைலர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் டி இமான் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பினை பெற்றிருந்தது. இமானின் 100 வது படமாக 'டிக் டிக் டிக்' விளங்குகிறது. இந்த படத்தை ஜபக்ஸ் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.மேலும் ரதீப்.E.ராகவ் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இப்படத்தினை அதே தலைப்பில் தெலுங்கில் டப் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் தெலுங்கு டப்பிங் உரிமையை ‘STTV ஃபிலிம்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான போஸ்டர் மற்றும் மோஷன் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 


ஜெயம்ரவியின் டிக் டிக் டிக் படத்தின் தெலுங்கு டீசர்


  Tags : 
 • tik tik tik telugu motion teaser release
 • tik tik tik telugu motion teaser
 • tik tik tik telugu movie motion teaser release
 • jayam ravi tik tik tik telugu motion teaser
 • tik tik tik telugu motion poster and teaser release
 • tik tik tik telugu motion poster
 • tik tik tik telugu dubbing
 • tik tik tik telugu dubbed
 • தெலுங்கில் வெளியாகும் ஜெயம் ரவியின் டிக் டிக் டிக்
 • தெலுங்கில் வெளியாகும் டிக் டிக் டிக்
 • டிக் டிக் டிக் தெலுங்கு மோஷன் டீசர் ரிலீஸ்
 • டிக் டிக் டிக் தெலுங்கு போஸ்டர் ரிலீஸ்
 • தெலுங்கில் வெளியாகும் விண்வெளி சார்ந்த படம்
 • டிக் டிக் டிக்
 • ஜெயம்ரவியின் டிக் டிக் டிக் படத்தின் தெலுங்கு டீசர்
 • tik tik tik moive telugu official motion teaser release