அதர்வாவின் புது படத்தில் வில்லனாக இணையும் பாலிவுட் நடிகர்

atharvaa new movie upen patel plays villain role

நடிகர் அதர்வா நடிப்பில் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் 'செம போத ஆகாத', இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து அதர்வா, 'டார்லிங்' படத்தை இயக்கிய சாம் ஆண்டன் மற்றும் 'இவன் தந்திரன்' படத்தை இயக்கிய ஆர் கண்ணன் ஆகியோருடன் இணைந்துள்ளார். இதில் ஆர்.கண்ணன் இயக்கும் புதிய படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் உபன் படேல் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இவர் சங்கர் இயக்கத்தில் பிரமாண்ட வெற்றி பெற்ற 'ஐ' படத்தில் வில்லன் கதாபத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது அதர்வாவிற்கு வில்லனாக நடிக்க உள்ளார். இது குறித்து இயக்குனர் ஆர் கண்ணன் கூறும்போது "அதர்வா நடிக்க உள்ள இந்த புது படத்தில் வில்லனாக உபன் படேல் நடிக்க உள்ளார். முதலில் இவரிடம் இந்த படத்தின் கதையையும் இவருடைய கதாபாத்திரத்தையும் சொன்னவுடன் உடனே நடிக்க ஒப்பு கொண்டார். இந்த படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் நிறைய வில்லன் கதாபத்திரம் கொண்ட படங்கள் வருகின்றன. அதில் இந்த கதை அவருக்கு மிகவும் கவர்ந்துள்ளததாகவும் உபன் படேல் சொன்னார். இந்த படத்தில் வில்லன் கதாபத்திரத்தை மிகவும் வலுவானதாக அமைத்துள்ளேன்.இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு அவர் மிகவும் பொருத்தமானவர் என உறுதியாக நம்புகிறேன். இந்த படத்தின் மூலம் அவரை நிச்சயம் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். கிளைமேக்சில் அதர்வா மற்றும் உபன் படேல் மோதும் காட்சிகள் படத்தில் சிறப்பானதாக அமையும். " என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் ஆர் கண்ணன் தயாரிக்கிறார். இந்த படத்தில் சுஹாசினி மணிரத்னம், ஆர்ஜே பாலாஜி, சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க உள்ளனர்.  பிரசன்னா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ராதன் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 19-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

atharvaa new movie upen patel plays villain role

அதர்வாவின் புது படத்தில் வில்லனாக இணையும் பாலிவுட் நடிகர்


  Tags : 
 • atharvaa new movie director R Kannan
 • director kannan speech about atharvaa new movie
 • upen patel play villain role in atharvaa new movie
 • atharvaa new movie heroine
 • atharvaa new movie heroine megha akash
 • atharvaa new movie villain upen patel
 • atharvaa new movie story
 • upen patel new villain movie
 • இமைக்கா நொடிகள்
 • செம போத ஆகாத
 • டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன்
 • இவன் தந்திரன் படத்தை இயக்கிய ஆர் கண்ணன்
 • அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ்
 • அதர்வாவின் புது படத்தில் வில்லனாக இணையும் பாலிவுட் நடிகர்