ads

வேலைக்காரன் படத்தில் இடம் பெற்ற இறைவா உயிரே வெளியீடு

velaikkaran iraiva uyire video song

velaikkaran iraiva uyire video song

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் கிறிஸ்துமஸ் விருந்தாக கடந்த 22ம் தேதி வெளியான படம் 'வேலைக்காரன்'. இந்த படம் ரசிகர்கள், விமர்சனங்கள் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் மலையாள நடிகர் ஃபகத் ஃபாஸில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் வெளிவந்த கருத்தவனெல்லாம் கலீஜாம், இறைவா - உயிரே பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் ரூபன் படத்தொகுப்பாளராகவும், ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும், டி.முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தில் சினேகா,தம்பி ராமையா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, விஜய் வசந்த், ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் என பல திரையுலக வட்டாரங்கள் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள இறைவா - உயரே அதிரடி ஹிட் பாடலை இன்று இரவு 9 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. 

வேலைக்காரன் படத்தில் இடம் பெற்ற இறைவா உயிரே வெளியீடு