விமலுடன் இணைந்த நடிகர் ஜெயம் ரவி

vemal upcoming kanni raasi first look

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடிப்பில் கடந்த நாட்களில் வெளிவந்த 'மன்னர் வகையறா' படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விமல் மற்றொரு புது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை புதுமுக இயக்குனர் முத்துகுமார் இயக்கிவருகிறார். இவர் இயக்குனர் சுந்தர்.சி-யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ‘காதல் மன்னன்' என்ற தலைப்பினை வைத்து படப்பிடிப்பு துவங்கப்பட்டது. சில காரணத்தினால் படத்தின் டைட்டில் ‘கன்னி ராசி' என்று மாற்றியிருப்பதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை கடந்த நாட்களில் வெளியிட்டது. மேலும் இந்த புது டைட்டில் நடிகர் பிரபுவின் நடிப்பில் 1985ம் ஆண்டு வெளியான படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.    



மேலும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலக்ஷ்மி சரத்குமார் இணைத்துள்ளார். முதல் முதலாக இணைத்துள்ள இந்த ஜோடியுடன் இயக்குனர் பாண்டியராஜன், ‘போராளி’ புகழ் திலீபன், சாம்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். மேலும் ரோபோ ஷங்கர், யோகி பாபு காமெடிகளில் கலக்கி வருகின்றனர்.



இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி தற்பொழுது அவரது ட்விட்டர் மூலம்  வெளியிட்டுள்ளார். படக்குழு வெளியிட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.    


விமலுடன் இணைந்த நடிகர் ஜெயம் ரவி


  Tags :