காளி படத்தின் நூறாய் லிரிக்கல் வீடியோ பாடல்

kaali movie noorai lyrical video song release, image credit - vijay antony

இயக்குனர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மனைவியான கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'காளி'. இந்த படத்தில் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்து வருகின்றனர். முன்னதாக இந்த படத்தில் இருந்து அரும்பே, அண்டமா போன்ற பாடல்கள் வெளியானது.



இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் நூறாய் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு நாயகன் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் விஜய் ஆண்டனியின் மனைவியான பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார். இந்த படத்தின் பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.



நான்கு நாயகிகள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளதாக படக்குழு தெரிவித்தது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 'அண்ணாதுரை' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி இந்த படத்திலும் இரட்டை கதாபாத்திரத்தை மேற்கொண்டுள்ளார். இந்த படம் வரும் மார்ச் மாதம் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது.