திமிரு புடிச்சவனை தொடங்கிய விஜய் ஆண்டனி

vijay antony thimiru pidichavan shooting start

இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவர உள்ள படம் 'காளி'. இந்த படத்தின் போஸ்டர், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களில் முடிவடைந்து தற்பொழுது படக்குழு போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் தகவலை விஜய் ஆண்டனி அவரது ட்விட்டரில் பதிவு செய்ததோடு படத்திற்கு 'திமிரு பிடிச்சவன்' என்ற தலைப்பினை வைத்து டைட்டில் லுக் போஸ்டரை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.      



 விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்களில் புதுபுது கெட்டப்பை கையாண்டு வருகிறார். இந்நிலையில் 'திமிரு பிடிச்சவன்' படத்தின் மூலம் முதல் முறையாக காவல் துறை அதிகாரி கெட்டப்பை கையாளவுள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகி இருப்பதோடு அவரும் காவல் துறை அதிகாரியாக வளம் வர உள்ளார். முதல் முறையாக இணைந்துள்ள இக்கூட்டணியின் படத்தினை கணேஷா என்பவர் இயக்கவுள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையின் பிரமாண்ட இயக்குனரான ராஜமௌலியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட சக்தி வெங்கடராஜ் கலை இயக்குனர் பணியை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பிற்கு சிறப்பு பூஜை நடைபெற்று படப்பிப்புகளும் துவங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் பூஜை நடைபெறும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழு வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.    

vijay antony thimiru pidichavan pooja stills
vijay antony thimiru pidichavan pooja stills 1

திமிரு புடிச்சவனை தொடங்கிய விஜய் ஆண்டனி


  Tags :