சேதுபதியின் 96 படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

vijay sethupathi trisha 96 movie rights

இயக்குனர் பன்னீர் செல்வன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளிவந்த 'கருப்பன்' பட வெற்றியை தொடர்ந்து தற்பொழுது விஜய் சேதுபதி 96 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மூன்று வித்தியாசமான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை மிரளவைக்கும் சில சாகசங்களில் ஈடுபட்டிருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. சேதுபதி நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சி.பிரேம்குமார் '96' படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனராக உருவெடுத்துள்ளார். மேலும் திரிஷா  நாயகியாக நடித்து வருகிறார். ‘மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து வரும் இப்படத்தில் ஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் காமெடி நடிகர் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் இளம் வயது  விஜய் சேதுபதியாக நடித்து வருகிறார். கோவிந்த் மேனன் இசையமைக்கும் இப்படத்தில் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவாளராகவும், ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பாளராகவும் இணைந்துள்ளனர்.படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தினை வருகிற பிப்ரவரி மாதத்தில் வெளியிட உள்ள இந்நிலையில் படத்தின் ஒரு முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல சன் டிவி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை சன் டிவி நிறுவனம் அவர்களது ட்விட்டரில் பதிவு செய்து வெளியிட்டுள்ளது.   


சேதுபதியின் 96 படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்


  Tags : 
 • vijay sethupathi 96 movie satellite rights in sun tv
 • vijay sethupathi 96 movie satellite rights
 • makkal selvan vijay sethupathi movie satellite rights
 • vijay sethupathi
 • vijay sethupathi movie satellite rights
 • vijay sethupathi upcoming movie satellite rights in sun tv
 • vijay sethupathi upcoming movie satellite rights
 • 96 movie satellite rights in sun tv
 • 96 movie satellite rights
 • vijay sethupathi upcoming movie
 • vijay sethipathi new movie
 • 96 movie actress trisha
 • 96 release date
 • trisha
 • சேதுபதியின் 96 படத்தின் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
 • 96 படத்தின் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி
 • விஜய் சேதுபதியின் புதிய படத்திற்கு சேட்டிலைட் உரிமை
 • விஜய் சேதுபதியின் 96 படத்தின் சேட்டிலைட் உரிமை
 • விஜய் சேதுபதியின் 96 படத்தின் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி
 • 96 படத்தின் உரிமையை கைப்பற்றிய சன் டிவி
 • 96 படத்தின் சேட்டிலைட் உரிமை
 • விஜய் சேதுபதியின் 96 படத்தின் முக்கிய தகவல்
 • 96 படத்தின் புதிய தகவல்
 • vijay sethupathi trisha 96 movie broadcast rights
 • vijay sethupathi trisha 96 movie broadcast rights in sun tv
 • vijay sethupathi 96 movie broadcast rights