ads

நிவின் பாலி படத்தில் விஜய் சேதுபதி

vijay sethupathi acting in nivin pauli movie

vijay sethupathi acting in nivin pauli movie

 '36 வயதினிலே', 'மும்பை போலீஸ்' போன்ற படங்களில் பிரபலமான ரோஷன் ஆண்ட்ருஸ் தற்போது மலையாளத்தில் 'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் கொச்சுண்ணியாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இந்த படத்தின் நாயகியாக அமலா பால் நடிக்கிறார். இந்த படத்தின் கதையை பாபி, சஞ்சய் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த படத்தை ஸ்ரீகோகுலம் மூவிஸ் தயாரிக்கிறது.

காயம் குளம் பகுதியில் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'காயம்குளம் கொச்சுண்ணி' பற்றிய கதை. இவர் வீரப்பன் போன்று பல செல்வந்தர்களிடம் பணம், பொருள்களை பறித்து அவற்றை எளிய மக்களுக்கு வழங்கி வந்துள்ளார். மேலும் இவர் 1859-ஆம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புறா ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்பு அங்கேயே இயற்கை எய்தினார். இவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிவின் பாலி படத்தில் விஜய் சேதுபதி