ஜூங்கா படத்தில் கூட்டிப்போ கூடவே பாடல் முன்னோட்டம்

By : Rathiga       Published On : Feb 13, 2018 18:29 IST    
junga koottippo koodavae single release junga koottippo koodavae single release

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் படம் 'ஜூங்கா'. இந்த படத்தினை ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம்  விஜய் சேதுபதி - இயக்குனர் கோகுல் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இவர்களது கூட்டணியில் உருவான 'இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா' படத்தினை போன்று 'ஜூங்கா' படமும் காமெடியை மையமாக வைத்து உருவாக்கி வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கெட்டப்பில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இவருக்கு ஜோடியாக 'வனமகன்' புகழ் சாயிஷா சைக்கிள் இணைந்துள்ளார். இவர்களுடன் நடிகை மடோனா சபாஸ்டின், யோகி பாபு போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.    கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இப்படத்தினை நடிகர் விஜய் சேதுபதி ப்ரொடக்சன் சார்பில் அருண் பாண்டியன், கே கணேஷ், ஆர்எம் ராஜேஷ் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. மேலும் கடந்த நாட்களில் படக்குழு வெளியிட்ட போஸ்டர், டீசர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற 'கூட்டிப்போ கூடவே' என்ற பாடலின் முன்னோட்டத்தை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் முன்னோட்டத்திற்கு மக்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் 'கூட்டிப்போ கூடவே' பாடலை முழுவதுமாக நாளை (14.2.2018) காதலர் தினத்தினை முன்னிட்டு வெளிவர உள்ளது.


ஜூங்கா படத்தில் கூட்டிப்போ கூடவே பாடல் முன்னோட்டம்