ஜூங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

junga movie official first look poster

'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' காமெடி படத்தினை இயக்கி நல்ல வெற்றியை பெற்ற இயக்குனர் கோகுல், இதனை தொடர்ந்து எழுத்து மற்றும் இயக்கத்தில்  'ஜூங்கா' படத்தினை இயக்கிவருகிறார். இந்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி மாறுபட்ட வேடத்தில் நடித்துவருகிறார். இவருடன் இணைந்து ,சாயிஷா, யோகி பாபு, நேஹா சர்மா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்தின் படப்பிடிப்புகள் பரிசில் தொடங்கி ஐரோப்பியா நாட்டில் முடிவடைய இருக்கிறது. தற்பொழுது படத்தின் படப்பிடிப்புகள் இறுதி நிலையை எட்டியுள்ளது.அருண் பாண்டியன், கணேஷ், ராஜேஷ் குமார் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். மேலும் சாபு ஜோசப் படத்தொகுப்பு பணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தருணத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்திருந்தனர்.  தற்பொழுது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் சேதுபதியை பார்க்கும் போது காமெடி கலந்த வில்லன் கெட்டப்பை கையாண்டிருப்பது போன்று தெரிகிறது. மேலும் படத்தின் டைட்டில் டீசரை மலேசியாவில் இன்று நடைபெற இருக்கும் 2018 ஆண்டிற்கான நட்சத்திர விழாவில் வெளியிட உள்ளனர்.            

junga movie official first look poster

ஜூங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்


  Tags : 
 • junga first look poster
 • junga first look poster release
 • junga first look
 • junga first look release
 • vijay sethupathi
 • junga first look poster launched
 • ஜூங்கா படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்
 • ஜூங்கா பஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
 • ஜூங்கா பஸ்ட் லுக் போஸ்டர்
 • ஜூங்கா பஸ்ட் லுக்
 • ஜூங்கா பஸ்ட் லுக் ரிலீஸ்
 • விஜய் சேதுபதி
 • ஜூங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
 • junga movie official teaser
 • junga movie audio
 • junga movie trailer
 • vijay sethupathi junga first look poster
 • vijay sethupathi junga first look
 • junga movie title teaser release
 • junga movie title teaser
 • junga movie teaser
 • junga movie first look teaser
 • junga title teaser
 • vijay sethupathi junga news
 • vijay sethupathi junga updates