விஜய் சேதுபதியின் புது பட தகவல்

vijay sethupathi joins sethupathi director

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வருடத்திற்கு 6 - 7 படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்று வருவதோடு தற்பொழுது நடித்து வரும் படங்களில் மாறுபட்ட கதாபாத்திரத்தை கையாண்டு வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் பல வித்தியாசமான தோற்றத்தை கையாண்டு மக்கள் மத்தியிலும் விமர்சனங்கள் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாக்கி வரும் 96, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களிலும் இது வரை கையாலாத மாறுபட்ட தோற்றத்தை மேற்கொண்டு வருகிறார்.     



இந்நிலையில் விஜய் சேதுபதி ஒரு புது படத்தில் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த படத்தினை அருண் குமார் இயக்கவுள்ளர். இவர்களது கூட்டணி பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்கள் மூலம் இணைத்துள்ளது. இவர்களது கூட்டணியில் வெளிவந்த 'சேதுபதி' படத்தில் காவல் துறை அதிகாரியாக வளம் வந்த விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு இன்றளவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.  தற்பொழுது வந்த தகவலில் மூன்றாவது முறையாக இவர்களது கூட்டணி இணையவிருக்கிறதாம். இந்த படத்தின் ப்ரீ - ப்ரொடெக்சன் பணிகள் முடிவடைந்ததும் முதல் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட்டில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால், முதல் கட்ட படப்பிடிப்பு தமிழ் நாட்டில் துவங்கி அடுத்தகட்ட படப்பிடிப்பை மலேசியாவில் தொடர படக்குழு திட்டமிட்டுள்ளது.  



தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி அதன் பின்னர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, தர்மதுரை, கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர், கருப்பன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்றுள்ளார். இவரது நடிப்பில் வெளிவந்த 'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலம் சிறந்த வில்லன் கதாபாத்திரத்திற்காக தமிழக அரசு மாநில விருது வழங்கப்பட்டது. பீட்சா - சிறந்த நடிகருக்கான சீமா விருது, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - Edison விருது மற்றும் சில படங்களுக்கு பிலிம் பேர் விருது, விஜய் விருது பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.  


விஜய் சேதுபதியின் புது பட தகவல்


  Tags :