அடுத்த கட்டத்தில் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்

super deluxe movie shooting updates

பன்னீர் செல்வன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 'கருப்பன்' பட வெற்றியை தொடர்ந்து, சூப்பர் டீலக்ஸ், 96, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இமைக்கா நொடிகள், இடம் பொருள் ஏவல், சை-ரா, ஜூங்கா போன்ற பல படங்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதில் சில படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் சேதுபதி தற்பொழுது நடித்து வரும் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தை கையாண்டு வருகிறார். இதில் 'சூப்பர் டீலக்ஸ்', 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'ஜூங்கா', '96' போன்ற படங்களின் மூலம் முதல் முறையாக பல வித்தியாசமான தோற்றத்தை கையாண்டுள்ளார்.        இதில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தை மேற்கொண்டுள்ளார். தல அஜித் நடிப்பில் வெளிவந்த 'என்னை அறிந்தால்' படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கம் மற்றும் அவருக்கு சொந்தமான 'Tyler Durden And Kino Fist' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அவரே தயாரித்து வரும் இப்படத்தில் ஃபகத் ஃபாஸில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநர் மிஷ்கின் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் பி.எஸ்.வினோத் – நிரவ்ஷா ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில் வெளிவந்த விஜய் சேதுபதியின் ஷில்பா கெட்டப் புகைப்படம், சமந்தா கதாபாத்திரமான வேம்பு கெட்டப் டீசர் போன்றவை சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்திருந்தது. இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று துவாகியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் இயக்குனர் மிஸ்கின் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுவதாக தகவலில் வெளியாகியுள்ளது.    

super deluxe movie shooting updates

அடுத்த கட்டத்தில் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்


  Tags : 
 • vijay sethupathi in super deluxe shooting updates
 • vijay sethupathi and samanthas super deluxe shooting updates
 • super deluxe shooting updates
 • super deluxe shooting
 • super deluxe shooting schedule updates
 • அடுத்த கட்டத்தில் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்
 • சூப்பர் டீலக்ஸ் அடுத்த கட்ட படப்பிடிப்பு
 • விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்பு
 • சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்பு
 • விஜய் சேதுபதி
 • விஜய் சேதுபதியின் ஷில்பா கெட்டப் புகைப்படம்
 • சமந்தா
 • விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரம்