ads

அஜித்தின் விசுவாசம் படத்தில் இணைந்த பிரபல பாடகர்

vijay yesudas joins thala 58

vijay yesudas joins thala 58

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக மட்டும் இல்லாமல் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகமாக பிடித்திருப்பவர் தல அஜித். இவரது படங்கள் வருவதாக தகவல் வந்தாலே ரசிகர்கள் வலைத்தளத்தில் ட்ரெண்ட்டாக்குவதில் மும்பரமாக இறங்கிவிடுவது வழக்கமான செயல்களில் ஒன்றாகும். இந்நிலையில் தல அஜித் தனது 58வது படத்தினை சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கவுள்ளதாக முன்னதாகவே தகவல் வந்திருந்தது. மேலும் படத்தின் படப்பிடிப்பிற்கு சிறப்பு பூஜையை கடந்த நாட்களில் நடத்திய படக்குழு படத்தின் தலைப்பு 'விசுவாசம்' என்றும் படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவலை வெளியிட்டிருந்தனர். இந்த தகவல் வந்த சில மணி நேரத்தில் அஜித் ரசிகர்கள் புதுவிதமான செயல்களை கையாண்டு வலைத்தளத்தில் ட்ரெண்டாகி சாதனையை படைத்தனர். 

படத்தில் இணையவிருக்கும் பிரபலங்களின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக பிரபல பாடகரான விஜய் யேசுதாஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை மலையாள பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த போது அவரே வெளியிட்ட தகவல் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவரது நடிப்பில் 'படை வீரன்' என்ற படம் இன்று திரையுலகில் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதகவே படத்தின் இசையமைக்கும் பணியில் அனிருத் இணையவிருப்பதாகவும் நாயகியாக அனுஷ்கா ஷெட்டி இணைவதாகவும் தகவல் வந்திருந்தது. இந்த தகவலின் அறிவிப்பும் விரைவில் படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது.    

அஜித்தின் விசுவாசம் படத்தில் இணைந்த பிரபல பாடகர்