ads

புத்தாண்டிற்கு விருந்தளிக்க வரும் ஸ்கெட்ச் படக்குழு

sketch movie lyrics

sketch movie lyrics

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி த்ரில்லர் படம் 'துருவநட்சத்திரம்'. இந்த படத்தினை தொடர்ந்து சீயான் விக்ரம் தர லோக்கல் கெட்டப்பில் 'ஸ்கெட்ச்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விஜய் சந்தர் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ளது. சீயான் விக்ரமிற்கு ஜோடியாக தமன்னா இணைந்துள்ளார். இந்த ஜோடியுடன் சேர்ந்து முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா, சூரி நடித்து வருகின்றனர். மேலும் பேசப்படும் கதாபாத்திரத்தில் மெகாலி, ராதாரவி, வேல ராமமூர்த்தி, ஸ்ரீமன், ரவி கிஷான், ஆர்கே. சுரேஷ், ஹரீஸ் பேரடி உள்பட பலர் நடித்துள்ளனர்.

பொங்கல் திருநாளுக்கு விருந்தளிக்க வரும் இப்படத்தில் தமன் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் ரூபன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். நடிகர் விக்ரம் படத்திற்காக வித்தியாசமான கெட்டப்பில் களமிறங்கியதோடு டப்பிங்கில் புது வித குரலையும் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் கடந்த நாட்களில் வெளிவந்த போஸ்டர், டீசர், 'கனவே கனவே - அட்சி புட்சி - சீனி சில்லாளே' என மூன்று சிங்கிள் வீடியோ போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வருகிற புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக  ஸ்கெட்ச் படக்குழு ஸ்பெஷல் கவர் சாங் ஒன்றை வெளியிட இருக்கின்றனர். இந்த தகவலை படத்தின் இசையமைப்பாளர் தமன் அவரது டிவிட்டரில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தினை தமிழ், தெலுங்கு திரையுலகில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியிடவுள்ளனர்.    

   

புத்தாண்டிற்கு விருந்தளிக்க வரும் ஸ்கெட்ச் படக்குழு