விசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இமான் அதிகாரபூர்வ அறிவிப்பு

viswasam movie music director imman officially announced

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் 'விவேகம்' படத்திற்கு பிறகு 'விசுவாசம்' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித் காவல் துறை அதிகாரியாகவும், லோக்கல் கெட்டப்பில் நடிப்பதாகவும் நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளிவருகிறது.



முன்னதாக இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல் வெளியான நிலையில் தற்போது படக்குழு அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.



இந்த படத்தை 'விவேகம்' படத்தை அடுத்து இரண்டாவது முறையாக சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அர்ஜுன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். தல அஜித்தின் ஒவ்வொரு படத்திலும் சென்டிமென்டும், அவரின் விசுவாசமும் நிறைந்து காணப்படும்.



இதனால் அஜித்தின் 58 வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு 'விசுவாசம்' என்ற தலைப்பு கச்சிதமாக பொருந்தியுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், இதர தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.