யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட பியார் பிரேமா காதல் மோஷன் போஸ்டர்

By : Velu       Published On : Feb 08, 2018 15:33 IST    
pyaar prema kaadhal movie motion poster pyaar prema kaadhal movie motion poster

பிக்பாஸ் பிரபலங்கள் ஹரிஸ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பியார் பிரேமா காதல்'. இந்த படத்தை புதுமுக இயக்குனர் எலன் இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டரை இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார். இந்த படத்தை வைஎஸ்ஆர் பிலிம்ஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, எஸ்என் ராஜராஜன், மாலிக் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் மூலம் ஹாரிஸ் கல்யாண், ரைசா ஆகியோர் முதல் முறையாக இணைகின்றனர்.இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து, இசையமைத்தும் வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை பானுபிரியா, பொற்கொடி ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்திற்கு ராஜா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். மேலும் எஸ் மணிகுமாரன் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை கையாண்டுள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளை படக்குழு துவங்கியுள்ளது. இந்த படத்தில் நடிகை பானுபிரியா, நாயகன் ஹாரிஸ் கல்யாணுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகி வரும் இந்த படம் வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட பியார் பிரேமா காதல் மோஷன் போஸ்டர்