அண்ணாதுரை எதிர்பார்த்த அளவிற்கு திருப்தி படுத்தவில்லை

annadurai movie review

அண்ணாதுரை படத்தின் நாயகன் விஜய் ஆன்டனி கதை தேர்வு சிறப்பாக செய்ய கூடியவர். அவர் தேர்ந்ததெடுத்த சமீபத்திய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுஇருந்தது. இவர் தேர்வு செய்யக்கூடிய கதைகளில் சில சாமானிய மக்கள் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் ஒத்துப்போகும் அளவிற்கு இருக்கும். விஜய் ஆன்டனி நடித்த பிச்சைக்காரன் மிக பெரிய வெற்றிபெற்று பல வாரங்கள் திரையிடப்பட்டது.



அவர் நடிப்பில் இந்த வரம் வெளிவந்த அண்ணாதுரை திரைப்படம் ஒத்த இரட்டை பிறவிகளின் யதார்த்தமான கதை. அண்ணனின் ( அண்ணாதுரை ) அஜாக்கிரதையாள் ஏற்படும் தவறினால் தம்பிக்கும் (தம்பிதுரை) தந்தைக்கும் ஏற்படும் சிக்கல்கள், அவற்றை எப்படி அண்ணன் சரி செய்கிறான் என்பதுதான் கதை.



முதல் பகுதியின் திரைக்கதை நன்றாக இருந்தாலும், மிக மெதுவாக செல்கிறது. இரண்டாம் பகுதி நன்றாகவே இருக்கிறது ஆனால் முடிவில் சொதப்பிவிட்டார்கள். விஜய் ஆன்டனியின் நடிப்பு, அம்மா, வில்லன் போன்ற கதாபாத்திரங்களின் நடிப்பு நன்றாக இருந்தாலும், அழுத்தமான கதை களம் இல்லாததால், ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் மிக குறைவு.


அண்ணாதுரை எதிர்பார்த்த அளவிற்கு திருப்தி படுத்தவில்லை