'அவள்' பயமிருக்கிறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை..

'அவள்' பயமிருக்கிறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை..

இன்றைய உலகில் பொதுவாக பேய் படம் என்றால் காமெடி படமாக மாறியுள்ளது. இதற்கு விதிவிலக்காக இருக்கும் படம் தான் அம்மன், மாயா போன்ற சில படங்கள். இந்த வரிசையில் 'அவள்' படம் இடம் பெறுமா என்று அனைவரிடமும் எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு காரணம் 'அவள்' படத்தின் மிரட்டல் ட்ரைலர் தான்.



இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுத்தது என்று படக்குழு தெரிவித்தது. இதனால் எதிர்பார்ப்பு அதிகமாயின. படத்தின் முதல் கட்டம் சைக்கிளில் போற மாதிரி வேகம் குறைவாக இருந்தாலும் அடுத்த கட்டத்தில் புல்லட் ட்ரைனை மிஞ்சும் அளவிற்கு அனைவரையும் எதிர்பார்க்கவைக்கிறது. இந்த படத்தில் சித்தார்த் கைதேர்ந்த மூளை அறுவை சிகிச்சை மருத்துவராக இருக்கிறார். சித்தார்த்தும், ஆண்ட்ரியாவும் ஹிமாச்சல பிரதேசத்தில் வசித்து வருகின்றனர். வீட்டிற்கு அருகில் அதுல் குல்கர்னே குடியேறுகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். இரு குடும்பத்தினரும் இயல்பாக பழக ஒரு நாள் அதுல் குல்கர்னே மூத்த மகள் நடிகை அனிஷா கிணற்றில் விழுகிறார். அவரை சித்தார்த் காப்பாற்றுகிறார். இதனால் அனிஷா நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது. 



பொதுவாக பேய் படம் என்றால் அவங்க வீட்டிலிருந்து வரும் ஆனால் இந்த படத்தில் பக்கத்து வீட்டிலிருந்து வருகிறது. இதனால் பேய் மீது நம்பிக்கை இல்லாமல் கம்பீரமாக இருக்கும் அதுல் குல்கர்னேவை பயமுறுத்தி விடுகிறது. படத்தின் ஒரு கட்டத்தில் இரு குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதிலிருந்து எப்படி அவர்கள் உயிரை காப்பாற்றுகின்றனர், எப்படி மீள்கின்றனர், யார் அவள் என்பதை மீதி கதை. இறுதியாக சொல்லப்போனால் காமெடி பேய் படத்தை பார்த்து பேயின் மீது பயமவிட்டு போனவர்களுக்கு இந்த 'அவள்' கண்டிப்பாக அவர்களை கதறவைக்கும். 



இந்த படத்தை மிலிந்த் ரவ் இயக்கியுள்ளார், இந்த படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, அனிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு க்ரிஷ் இசையமைத்துள்ளார். வியாகம் 18 மோஷன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பின் கீழ் நடிகர் சித்தார்த் இந்த படத்தை தயாரித்துள்ளார். தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு திரைப்பட துறையினர், இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தற்போது பெற்று வருகிறது. 


'அவள்' பயமிருக்கிறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை..