பொங்கல் ரேஸில் வெளிவந்த படங்களின் உண்மை நிலவரம்

By : Rasu       Published On : Jan 16, 2018 12:18 IST    
2018 pongal tamil movies 2018 pongal tamil movies

மிக எதிர்பார்ப்புகளுடன் பொங்கல் பண்டிகையில் வெளிவந்த மூன்று திரைப்படங்கள், தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் மற்றும் குலேபகாவலி. இந்த மூன்று திரைப்படங்களில் நடித்த ஹீரோக்கள் அனைவரும் மிக பிரபலமானவர்கள் என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. மூன்று திரைப்படங்களின் கதைகள் முற்றிலும் மாறுபட்டவை, இப்படி இருந்தாலும் அதிக வரவேற்பை பெற்றது ஒரு படமே.அந்த படம் தானா சேர்ந்த கூட்டம், இதற்காக இந்த படம் சூப்பர் டூப்பர் என்று சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும், வந்ததில் இந்த படம் நன்றாகவே இருந்தது. சிபிஐ மற்றும் வருமான வரித்துறைக்கு நேர்மையான முறையில் வேலைக்கு செல்ல நினைக்கும் ஹீரோ ஏமாற்றம் அடைந்ததால், எப்படி அதை எதிர்கொண்டு வெல்கிறார் என்பதே கதை. இதற்கு முன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான் முற்றிலும் காமெடி படமாக அமைந்தது ஆனால் இந்த படம் அந்த அளவிற்கு காமெடி இல்லை.ஸ்கெட்ச் படம், தேவையற்ற பாடல்களும் கதை ஒரே நேர்கோட்டில் செல்லாததால் சற்று சலுப்பு தட்டியது. இருந்தாலும் ஹீரோ விக்ரம் அவர்களின் நடிப்பே படத்தை ஓர் அளவிற்கு காப்பாற்றியது.குலேபகாவலி, சிறந்த நடிகர்கள் இருந்தாலும் நகைச்சுவைகள் ரசிக்கும்படி இல்லாததால், எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.ஐந்து நாள் விடுமுறை என்றாலும், எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் முன்பதிவு நடக்கவில்லை. சில காட்சிகள் அரங்கம் நிறையவில்லை. கடைசி நிமிடத்தில் அரங்கம் நிறையும் சூழல் இருந்தது.


பொங்கல் ரேஸில் வெளிவந்த படங்களின் உண்மை நிலவரம்