கீர்த்தி சுரேஷுக்கு பிரியா விடை கொடுத்த படக்குழு

TSK movie team

'நானும் ரௌடி தான்' படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், நந்தா, ஆர்ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்து வருகின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். 



இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த 'சொடக்கு மேல சொடக்கு போடுது' பாடலுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்திருந்தது. இதனை அடுத்து டீசரில் வெளிவந்த சூர்யாவின் வசனமும் தற்பொழுது வலைதலத்தில் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.     



இந்நிலையில் இறுதிக்கட்ட பாடலின் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது.  கீர்த்தி சுரேஷின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டதினால் படக்குழுவினர் அவருக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பியது. இதனை வெளிப்படுத்து விதமாக கீர்த்தி சுரேஷ் அவரது ட்விட்டரில் படக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் படக்குழுவினருடன் எடுத்த ஓரு புகைப்படத்தினை வெளியிட்டதோடு பொங்கலுக்கு நாங்கள் வருகிறோம் என்று பதிவில் வெளியிட்டுள்ளார். 



மேலும் இப்படம் தெலுங்கில் 'காங்க்' என்ற தலைப்பில் வெளிவரயுள்ளது, இதன் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிட்டுள்ளனர்.          

Suriya Gang Telugu Movie first look