நடிகர் ஜீவாவின் கொரில்லா டைட்டில் லுக் வீடியோ

By :        Published On : Feb 01, 2018 10:53 IST    
gorilla movie shooting begins today gorilla movie shooting begins today

நடிகர் ஜீவா நடிப்பில் தற்போது கீ, கலகலப்பு போன்ற படங்கள் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் ஜீவாவின் 29 வது படத்தை இயக்குனர் டான் சாண்டி  இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'கொரில்லா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஜீவா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இதற்கான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் படக்குழு வெளியிட்டுள்ளது.மேலும் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் வீடியோ ஒன்றை ஜீவா தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக இம்மாத இறுதியில் தாய்லாந்து செல்ல உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் முதன் முறையாக சிம்பன்சி குரங்கு நடிக்க உள்ளது. தாய்லாந்தில் உள்ள குரங்கு பயிற்சி மையத்தில் இந்த சிம்பன்சி குரங்கின் பயிற்சி துவங்க உள்ளது.இதனை தொடர்ந்து ஜீவாவின் 30 வது படத்தை அவரது 'சிங்கம் புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சாய் ரமணியும், அடுத்த படத்தை 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தை இயக்கிய இயக்குனர் ஐக்கும் இயக்க உள்ளனர். மேலும் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி இவருடைய கலகலப்பு 2, கீ போன்ற படங்கள் வெளியாக இருந்தது. இதில் இயக்குனர் காலிஸ் இயக்கியுள்ள 'கீ' படத்தின் வெளியீடு தேதி தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விரைவில் வெளியீடு தேதியை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

gorilla movie title look poster release today at 5 pmgorilla movie title look poster release today at 5 pm

நடிகர் ஜீவாவின் கொரில்லா டைட்டில் லுக் வீடியோ