நடிகர் சரத்குமாரின் பாம்பன் படப்பிடிப்பு துவக்கம்

paamban movie stills and posters

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சரத்குமார் நடிப்பில் கடந்த அக்டொபர் மாதம் 'சென்னையில் ஒரு நாள் 2' படம் வெளியானது. இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் 'பாம்பன்'. இந்த படத்தை இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்க உள்ளார். இவர் முன்னதாக பகவதி, குத்து, ஏய், சாணக்யா, துரை, மாஞ்சா வேலு, வல்லக்கோட்டை, சண்டமாருதம் போன்ற பல அதிரடி படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாடல் பதிவுடன் இன்று ஆரம்பமாக உள்ளதாக நடிகர் சரத்குமார் தனது டிவிட்டரில் தெரிவித்து இந்த படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.



இந்த படம் ரசிகர்களுக்கு இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் புதுவித அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் போன்றவற்றை இயக்குனர் ஏ வெங்கடேஷ் மேற்கொள்கிறார். இந்த படத்தை SSK ப்ரொடக்சன் சார்பில் SSK சங்கரலிங்கம் தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் போஸ்டர்களை தற்போது சரத்குமார் வெளியிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான 'Justice League' படத்தில் ஜேசன் மொமா என்பவரின் கதாபத்திரம் போன்று இருப்பதாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

paamban movie stills and posters
paamban movie stills and posters
paamban movie stills and posters
paamban movie stills and posters

நடிகர் சரத்குமாரின் பாம்பன் படப்பிடிப்பு துவக்கம்