நடிகர் ஷாமின் காவியன் படத்தின் டீசர் வெளியீடு

By :        Published On : Feb 09, 2018 09:58 IST    
kaviyyan movie official teaser kaviyyan movie official teaser

நடிகர் ஷாம் நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் 'காவியன்'. இந்த படத்தை புதுமுக இயக்குனர் பார்த்தசாரதி இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஷாம், ஸ்ரீதேவி குமார், 'மனம் கொத்தி பறவை' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஆத்மீயா ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் சத்யன் சிவகுமார், ஸ்ரீநாத் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை 2M சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் கேவி சபரீஷ் தயாரித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு, கன்னட போன்ற மொழிகளில் உருவாகிவரும் இந்த படத்திற்கு சியாம் மோகன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கு மோகன் ராஜன் பாடல் வரிகளை அமைத்துள்ளார். இந்த படம் முழுக்க சாலையில் திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இந்த படத்தில் ஹாலிவுட் பிரபலங்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தில் வில்லனாக ஹாலிவுட் நடிகர் களமிறங்கியுள்ளார்.முழுக்க சாலையில் நடக்கும் சம்பவங்களை வைத்து உருவாகும் இந்த படத்தில் விலையுர்ந்த வாகனங்களான ரோல்ஸ் ரொய்ஸ், ஹம்மர் போன்ற வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைய ஹாலிவுட் கலைஞர்களை இறக்கியுள்ளனர். முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் போன்றவை வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.