அனிருத் வெளியிட்ட பூமராங் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

By : Velu       Published On : Feb 14, 2018 11:32 IST    
anirudh release boomerang movie first look poster, image credit - boomerang team anirudh release boomerang movie first look poster, image credit - boomerang team

இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'பூமராங்'. இவர் முன்னதாக ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, இவன் தந்திரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவருடைய இயக்கத்தில் அதிரடியாக உருவாகி வரும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் அதர்வா நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் நாயகியாக நடித்து வரும் மேகா ஆகாஷ் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தில், இயக்குனர் சங்கரின் 'ஐ' படத்தில் வில்லனாக நடித்த உபேன் படேல் நடித்து வருகிறார். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை மிகவும் வலுவானதாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் கண்ணன்.முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் டைட்டிலை வெளியிட்டார். இவரை தொடர்ந்து தற்போது இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி அனிருத் நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரதன் இசையமைத்து வருகிறார்.இவர் முன்னதாக தெலுங்கில் வெளிவந்த ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி, சதிஷ், 'மேயாத மான்' இந்துஜா, சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற அனைத்தையும் இயக்குனர் ஆர் கண்ணன் மேற்கொள்கிறார்.

anirudh release boomerang movie first look poster, image credit - boomerang teamanirudh release boomerang movie first look poster, image credit - boomerang team

அனிருத் வெளியிட்ட பூமராங் பர்ஸ்ட் லுக் போஸ்டர்


  Tags :