தனுஷின் ஹாலிவுட் படத்தின் பஸ்ட் லுக்

தனுஷின் ஹாலிவுட் படத்தின் பஸ்ட் லுக்

நடிகர் தனுஷ், கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டை அடுத்து முதன்முதலாக ஹாலிவுட்டில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தில் தனுஷ், அஜாதசத்ரு எனும் கேரக்டரில் நடிப்பதோடு, தெருவில் மேஜிக் நிகழ்ச்சி நடத்தும் மேஜிக் கலைஞர் வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.   



'மெர்சல்' விஜய்க்கு அடுத்த படியாக தனுஷ் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ ஹாலிவுட் படத்தில் மேஜிக்கில் கலக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்தினை உண்மை சம்பவத்தின் அடிப்படையில் பிரபல ப்ரெஞ்ச் நாவலை திரைப்படமாக உருவாக்கியுள்ளது. இந்த படத்தினை கர்நாடக நாட்டை சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் படப்பிடிப்புகள் பெல்ஜியம் நாட்டில் நடைபெற்று வருகிறது.  



பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி தனுசுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஒய் திஸ் கொலவெறி படத்திற்கு பிறகு தனுஷின் முக்கிய படமாக இந்த ஹாலிவுட் படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.    



இதன் படப்பிடிப்பு இறுதி நிலைக்கு வந்ததாகவும் அதன் பிறகு போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இப்படத்தின் வேலைகளை முடித்த பிறகு வட சென்னை, மாரி 2, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள தனுஷ் முடிவு செய்துள்ளாராம்.