தனது உதவி இயக்குனரின் படப்பிடிப்பை தொடங்கி வைத்த மோகன் ராஜா

By : Velu       Published On : Feb 15, 2018 13:59 IST    
director mohan raja starts asura guru movie shooting director mohan raja starts asura guru movie shooting

நடிகர் விக்ரம் பிரபு நடிக்க உள்ள 'அசுரகுரு' படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மோகன் ராஜா வரவழைக்கப்பட்டு இந்த படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார். விக்ரம் பிரபு நடிப்பில் இறுதியாக 'நெருப்புடா' படம் வெளியானது.இதனை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் பக்கா, துப்பாக்கி முனை போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது 'அசுரகுரு' படத்தின்  படப்பிடிப்பு பணிகளை இன்று படக்குழு தொடங்கியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த அசோக் எழுதி இயக்குகிறார்.இந்த படத்தை  ஜேஎஸ்பி பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜேஎஸ்பி சதீஸ் தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு ராமலிங்கம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள கிசோர் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த படத்தின் பூஜையை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் உடுமலை பேட்டை போன்ற பல்வேறு இடங்களில் நடக்க உள்ளது. 

actor vikram prabhu new movie shooting startedactor vikram prabhu new movie shooting started