சிம்பு மற்றும் ஓவியாவின் புது பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

simbu and biggboss oviya new movie title and first look poster release

பிக்பாஸ் ஓவியா நடிப்பில் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 'காஞ்சனா 3' படமும், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 'களவாணி 2' படமும் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு மற்றும் பிக்பாஸ் ஓவியா ஆகியோர் புது படத்தில் இணைய உள்ளதாக முன்பு தகவல் வெளியானது.



தற்போது இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு '90 எம்எல்' என்று தலைப்பு வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாகி வரும் இந்த படத்தில் பிக்பாஸ் ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.



இந்த படத்தை 'குளிர் 100' படத்தை இயக்கிய இயக்குனர் அனிதா உதீப் இயக்கி வருகிறார். நடிகர் சிம்பு 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கு பிறகு இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையமைப்பில் இந்த படத்தில் இருந்து கடந்த புத்தாண்டு அன்று 'மரண மட்ட' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.



இந்த பாடலை ஓவியா பாடியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தை நிவிஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு அரவிந் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளையும் அந்தோணி எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

simbu oviya new movie title 90 ml ninety ml

சிம்பு மற்றும் ஓவியாவின் புது பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


  Tags :