விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

vijay antony thimiru pudichavan movie tamil telugu first look poster

நடிகர் விஜய் ஆண்டனி 'அண்ணாதுரை' படத்தை தொடர்ந்து தற்போது 'காளி' படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, சில்பா மஞ்சுநாத் ஆகிய நான்கு நாயகிகள் இணைந்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் மார்ச் மாதம் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.



இதனை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி தனது புது படம் குறித்த அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது புது பட தகவலை தெரிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.  இந்த படம் இயக்குனர் கணேஷாவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு 'திமிரு புடிச்சவன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 'காளி' படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க உள்ளார்.  



ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சக்தி வெங்கடராஜ் கலை இயக்குனராக பணி புரிய உள்ளார். இந்த படத்தின் போஸ்டரை தமிழ் மற்றும் தெலுங்கில் மொழிகளில் படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் ஆண்டனி முதன் முறையாக காக்கி சட்டை அணியும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக போஸ்டரில் படக்குழு தெரிவித்துள்ளது.

vijay antony thimiru pudichavan movie tamil first look poster
vijay antony thimiru pudichavan movie telugu first look poster

விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்