விஜய் சேதுபதியின் சீதக்காதி பர்ஸ்ட் லுக்

By : Viki       Published On : Jan 17, 2018 14:21 IST    
vijay sethupathi 25th movie seethakaathi movie first look poster vijay sethupathi 25th movie seethakaathi movie first look poster

நடிகர் விஜய் சேதுபதி, 2010-இல் வெளிவந்த 'தென்மேற்கு பருவ காற்று' படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து பீட்ஸா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், ரம்மி உள்ளிட்ட 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாபெரும் ரசிகர்களின் வட்டாரத்தை பிடித்துள்ளார். இவருடைய நடிப்பில் 25 வது படமாக தற்போது உருவாகி வரும் படம் 'சீதக்காதி'. இந்த படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தை 'பேஷன் ஸ்டுடியோஸ்' சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கோவிந்தராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முற்றிலும் மாறுபட்ட இதுவரை கண்டிராத தோற்றத்தை கையாண்டுள்ளார். இதனை அடுத்து விஜய் சேதுபதியின் பிறந்த நாளான நேற்று (16-01-2017) கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினர். இவரின் பிறந்த நாள் பரிசாக 'சீதக்காதி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி முதியவர் தோற்றத்தில் காணப்படுகிறார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் 1970 காலங்களின் கருப்பு வெள்ளை புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

vijay sethupathi 25th movie seethakaathi movie first look postervijay sethupathi 25th movie seethakaathi movie first look poster

விஜய் சேதுபதியின் சீதக்காதி பர்ஸ்ட் லுக்


  Tags :