'இப்படை வெல்லும்' படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் நடிகர் அக்சை குமார்

'இப்படை வெல்லும்' படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் நடிகர் அக்சை குமார்

இயக்குனர் கவ்ரவ் நாராயணன் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் இப்படை வெல்லும். இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் அக்சை குமார் இன்று மாலை வெளியிடுவார் என படக்குழு நேற்று அறிவித்தது.தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது.



இதை அடுத்து வெகு விரைவாக படத்தின் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இந்த படத்தின் ட்ரைலரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது அடுத்து திரைத்துறைனர் பலர் இந்த படத்திற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிப்பின் கீழ் ஏ.சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.மேலும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.இந்த படம் அடுத்த மாதம் வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளது.


'இப்படை வெல்லும்' படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் நடிகர் அக்சை குமார்